இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018 புத்தாண்டு பொறுத்தவரை ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். இந்த வருடம் முக்கியமாக செய்யவேண்டியது உங்கள் கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். பணவரவு ஓரளவு சொல்லும்படி இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க முடியும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வண்டி வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். புதிதாக சொத்து வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். உங்கள் பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தற்போது பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். சிலர்க்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தனவரவு உண்டாகக்கூடும். பண வசதி காரணமாக உங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். எப்போதும் அலைச்சல்கள் சற்று கூடுதலாகவே இருக்கும். சில நேரங்களில் பொருளாதார நிலையில் பின்னடைவும், புதிய முயற்சிகளில் தடங்கலும் ஏற்பட நேரும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். உடல் நல தொந்தரவு இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை. சுப நிகழ்ச்சிகளில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு பிறகு சீராகும். திருமண சம்பந்தமான பேச்சுகள் தொடங்க சிறிது தாமதமாகும். வருமானத்தை மீறிய செலவுகள் வரக்கூடும். எனினும் சிக்கனத்தை கடைபிடித்து வந்தால் கடன்களை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் நேரக்கூடும். எதையும் சரியாக எடைபோடக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக சந்தீப்பீர்கள். ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உடையவர்கள் நீங்கள். எதையும் திட்டமிட்டு நடத்த கூடியவர்கள். இது ஏழரை சனிக்காலம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்தவும். உத்யோகத்தில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை காணலாம். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஒரு சில சிரமங்கள் இருந்தாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமான போக்கு காணப்படும். புதிய தொழிலையும் தொடங்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கும்.
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ ராகவேந்திரரை மனதார வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2018ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831